Thursday, February 12, 2009

உன் வார்த்தைகளில் என் உலகம்

பரிமளிக்க வேண்டினேன் எல்லாவற்றிலும் நீயாக

உன்னால் உருவான உன் உயிர் நான் என்பதால் ..

என்றும் உன் உறவு வேண்டும் மனிதனாக பிறக்க..


பிறக்க நினைத்தேன் அம்மா!

மீண்டும் உன் கருவறையில்..

நான் உள்ளே இருக்கும் பொழுது ..

நீ அடைந்த தாய்மை பூரிப்பை

பார்க்க மீண்டும் பிறக்க வேண்டும் அம்மா..


என் எண்ணத்தில் தோன்றுவதை

எப்படி சொல்வேன் அம்மா

உனக்கு நான் செய்த அவமதிப்பின்

வலி நான் உணரும் பொழுது

என்னை நான் சிந்திக்கவே வெறுக்கிறேன் ..


நீ என்னை வெறுத்ததால் நான் எப்பொழுதும்

கோபம் கொள்கிறேன்.. என்னிடம்

இருக்கும் வெறுப்புணர்வை ....

மற்றவர்கள் மேல் காட்டும் பொழுது .....


மதிப்பை உணர்கிறேன் நான்

உனக்கும் எனக்கும் இருக்கும்

உள்ள பிரிவு உணர்த்துகிறது

உந்தன் மதிப்பு மிக்க அன்பு ...


சிறப்பு வாய்ந்தது

உந்தன் வியப்பு ...




என்றுமே புரியாமல்

இயற்கையில் இருக்கும் நான் ..

அமைதிக்கடல்தான் என் மனம்

உன் நினைவும் அன்பும் ..

எப்பொழுதும் எனக்கு இருப்பதால் ...



நீ

என்னுடன் இருக்கும்

வரையில்....

எந்த துன்பம் வந்தாலும்

இன்பமாக மாற்றும் சக்தி

படைத்தவள் நீ மட்டுமே தோழி ...



நிஜம் மட்டுமே...

நீ ..உனக்குள் நான்

இருக்கும் உந்தன் நிஜம் .



கவனமாயிரு மனிதர்களே ..

இங்கு உலகில் மனிதன் ..

புரிந்து கொள்வதும் இல்லை ..

புரிந்து கொல்லப்பட்டும் இல்லை ..

என் எண்ணங்களுக்கு எப்படி ..

நான் மதிப்பு கொடுகிறேனோ ..

என் சக மனிதனுக்கும் மதிப்பு ..

கொடுப்பேன்...



வெற்றிக் கனி பறிப்போம்..

நித்தம் உண்மை உரைப்போம் ..

துச்சமாக எண்ணினாலும் ..

சிறு சிறு செயலின் மூலம் ..

வென்றிடுவோம் நம் ஒற்றுமையை ..


விட்டு விலகாத ஒரு பந்தம்.

நம் உறவு ..

தோழமை என்றும் துணை

நிற்கும் புரிதலுக்கு அப்பாலும் ...

முன்பு போல் குழந்தைகள் ஆவோம் ..

தோழி உன் குறும்பும் சிரிப்பும் ..

எப்பொழுதும் வேண்டினேன் உன்னிடம் ...



முற்றுப்பெறும் நமக்குள் ..

புரிதல் ஒன்றானால் ..

இல்லாமை முற்றுபெறும் ..





காட்சிப் பிழையாக இருந்தாலும் ..

அவை கானல் நீர் போன்றவை ..

நம் எண்ணம் முற்று புள்ளியை ..

தகர்த்து எரியும் ...





தகர்த்து எரியும் ...

எந்தன் பொய் முகமூடியை ..

நீ பார்க்கும் உண்மை பார்வையில் ..

என் பொய் முகம் காணமல் ..

தேடி அலைந்தேன் உன்னிடம் ..

திருப்பி தந்து விடு என் உண்மையை ..



என் முழு உண்மையை ..

உன்னிடம் சொல்லிவிட்டு ..

திரும்பி பார்கிறேன் ..

என் வாழ்கையை ..

உன் ஒரு அகசிரிப்பில் ..

நான் முழுமை ஆனேன் ...

No comments:

Post a Comment