Thursday, February 12, 2009

உன் எண்ணத்தின் செயல்

என் முழு உண்மையை ..

உன்னிடம் சொல்லிவிட்டு ..

திரும்பி பார்கிறேன் ..

என் வாழ்கையை ..

உன் ஒரு அகசிரிப்பில் ..

நான் முழுமை ஆனேன் ...




முழுமையான பெண்ணாக..

மாறி தான் போனாய் ..

என் கண்ணிரையும் அவநம்பிக்கையும்..

நீ என்னை விட்டு துரத்திய பொழுது ..

என்னுடன் பிறந்து வளர்ந்த நீ

என்னை அறியாமல் ..

முழுமையான பெண்ணாக..

நீ ..

உந்தன் அரவணைப்பில் நான் ...




போர்வைக்குள் இருக்கும்

உண்மை நான் .

உள்ளே இருக்கும் போதும்..

வெளிவந்த பிறகும் மாறாமல்

இருக்கும் நான் .ஒரே நிலை தான் ..

எனக்கு....

இருந்தும் நான் வேறுபடுகிறேன் ..

ஒவ்வொருவருக்கும் ..

ஒவ்வொருவிதமாய்....




இந்த பூமியும்

ஓர் புதிரே!

பதில்கள் தேடி

அலையும் நாம்

விடைகளை தொலைத்து ..

புதிர்களை நோக்கியே

செல்கிறோம் நாம்..


உன் தாய்மையை...

உணர்வை நானும் ..

உணர்ந்து இருக்கிறேன் அம்மா ..

உன் கர்ப்பத்தில் இருக்கும் அந்த ..

நிமிடங்கள் இன்னும் நான்

நினைத்து பார்கிறேன் ...

இன்னும் அந்த அழகான அமைதியை ...

உணர்கிறேன் அம்மா ..

என்னால் விவரிக்க இயலவில்லை ..

கண்ணிர் துளி தான் வருகிறது அம்மா ....



இல்லாத பொழுதாகவே இருக்கும் ..

உன் மவுனம் கூட எனக்கு இல்லாத

பொழுது ...

வெறுமையாக உணர்கிறேன் நான் ..

இப்பொழுது...

உன் மவுனத்தின் மொழியை

எப்பொழுது ரசிப்பேன் நான் ....


கவிதைகள்
மூலம் என்
எண்ணத்தின் வடிகால்கள் ..
கிடைக்கும் என்று
வந்தேன் .
இன்று ..
ஒவ்வோவோருமுறை..
நான் சிந்திக்க படுவதை ..
என்னை பற்றிய ..
பிம்பம் நாளுக்கு நாள் ..
வளருகிறது ...
நான் தேடும் தேடல் ..
எனக்குள் இன்னும் .
வளருகிறது ..
என் எண்ணத்தின் ..
பிரபஞ்சமும் ...
விரிவடைகிறது ...
எல்லை இல்லாமல் ...



புதிய பிரபஞ்சமோ....

நீ..

உன் பிரபஞ்சத்தின்

இயக்கம் என்னுள்..

இயங்கி கொண்டு

இருக்கிறது உனக்கு

அறியாமல் ...





அறியாமையால்

செய்த பிழை ..

என்றாலும்...

உன் பார்வை

என் மீது பட்டு ..

விட்டு போன பொழுது ..

உயிர்த்து எழுந்தேன் ..

உன்னால் ....





என் ஆவல்...

எப்பொழுதும்..

என்னை ..

விட்டு

போகவில்லை ..

அதையே என்னை ..

எப்பொழுதும் உயிர்ப்புடன்...

வைத்திருக்கிறது ..




வைத்திருந்தேன்..

என் மேல்..

நான் கொண்ட ..

நம்பிக்கை ..

என் வாழ்வில் ..

நான் வாழ போகும் ..

தருணங்களில் ..

எதிர்பார்த்து ..

இருக்கும் நான் ..

என் நம்பிக்கை ..

உன் அன்பு மூலம்..

உறுதி படுகிறது ..

நாம் வாழ போகும்.

வாழ்க்கை ...



வாழ்க்கை

என்றும் புதிரானது? ..

வியப்பானது ?...

நாம் அவை ..

எதிர்நோக்கும் ..

பொழுது ஏற்படுகிற ..

புரிதலே நமக்கு ..

வித்தியாசபடுகிறது ..

நம் வாழ்க்கை ..

அப்படி இருந்தும் ..

என் ரசனையில் ரசிக்கிறேன் ..

நான் என் ...

வாழ்கையை ...



வாழ்க்கை வருமாவென ..

நீ ..

காலத்தை எதிர் பார்க்கிறாய் ...

உன் உள்ளத்தில் ...

வாழ்ந்து வருவது ...

உனக்கு புரியவில்லை ...

இல்லை ..

என் அன்பு உனக்கு

புரிய வைக்கவில்லையா ?

நீ என்னை நினைக்கும் ..

போதுஎல்லாம் நான் ..

வாழ்கிறேன் உன் உள்ளதில்...

என்றும் மாறாத உன்..

அன்பை போல் ......





(தந்தை )
அன்பு

என்

மனதில்

பதித்து

விட்டு

செல்லும்

போதெல்லாம் ..

என்

முரண்பாடுகள் ..

உங்களிடம்

தோற்றுபோகிறது...

பெருமையாக ..




பெருமையாக தான் ..

இருந்தேன்..

என்னை சுற்றி ..

என் தோழமை உள்ளது ..

என்று ...

இன்று அனைவரின் ..

மவுனம் ..

என்னை ..

வெறுமையாக ..

நினைக்க வைக்கிறது ..

என் நினைவு ...




என் நினைவு ..

தனிமை

உணர்வை தேடி ..

அலைகிறது .

உன் மனதிடம் ...

எல்லோருக்கும் ..

கிடைக்குமா ?

இந்த வாய்ப்பு!!!..

உன் மனம் தான் ..

என் தனிமையின்

இருப்பிடம் ...

அங்கு நீ கூட இல்லை ..

நான் மட்டுமே தனிமையாக ..

உன் மனதில் ..

தனிமையான என் மனம் ...

No comments:

Post a Comment