Wednesday, August 19, 2009

என் எண்ணம்

கொண்டு சென்ற என்
விருப்பங்கள்
மீண்டும் என்னிடமே
விட்டு சென்றாய்...
உனக்கு பிடிக்காது
என்பதால் அல்ல
எனக்கு பிடிக்கும்
என்பதால் ....
போதாமல் பெருகும்
என் தனிமையின்
நிமிடங்கள் கூட்ட
வெறுப்புகளின்
நீண்ட தனி எண்ணம்
எட்டி பார்கிறது ...
கிளையிலே வெட்டி விடும்
உன் மவுனம்
விழுதுகளாக பிறக்கிறது
என் ஏக்கத்தின் மிச்சம்
உனக்கு தெரியாமல் ...


நிஜத்திற்கும் பொய்
முகம் உண்டு
உன்னை பார்க்கும்
பொழுது உணர்கிறேன் ..
என் மீது நேசம் கொண்டு
விட்ட பின்னும் வழக்கம்
போல் என்னை அலட்சியம்
செய்வது ....
உனக்கு வாடிக்கை ஆனது
இருந்தும் உன் ஊடலின்
பொழுது ஏற்படுகிற ஏக்கம்
பொய்யான உன் மனதிற்கு
நிஜம் காட்டும் உண்மை
உன் முகத்தின் பிரதிபலிப்பு தான் ....



போனது மீண்டும்
வருவதில்லை
நினைவுகள் வராமல்
போனதும் இல்லை ...
என்ன செய்வது என்று
யோசிக்கும் நிலையில்
மீண்டும் என்னை கடந்து
செல்லும் பாதையில்
விட்டு சென்றாய் சுவடுகளை
பின்பற்றி வரும் பொழுது
மறைந்தே போனது
உன் சுவடுகளும் நீயும் ....
சளைக்காமல் தேடுதல்
இன்னும் தீவீரமானது
உன்னால் ...


எதுவாயினும்
யாதுமாகி
நின்றாய்
உன் பிம்பமே
எனக்கொரு
மாறுதல் ஆனது ...
மாறா நினைவுகளில்
மகிழும் என் மனம்
இனிப்பாக மாறும்
அதிசியம் நிகழ்கிறது
நொடிக்கு நொடி ....


வீழ்ச்சி விளைவிக்கும்
எண்ணம் குடி புக
அனுமதியேன் ...
தடைகளை சுவடுகளாக
மாற்ற எம்மொழி
உதவ ...
வளரும் நின் சிறப்பை
போல் நாளும் பெருமை
பேச ...
செயல் புரிந்து வெற்றி
பெற்ற நின் பழமைக்கும்
நானும் உதாரணமானேன் ...
வெறும் வெற்று பேச்சல்ல
பேசாமல் உரைக்கும்
என் சிந்தனையின் கூற்று இது ...


கவிதையாய் வடித்தேன்
என் அனுபவங்களை
என் உணர்ச்சிகளின்
வடிகாலாக பெற்ற
என் சிந்தனை
மொழி பெயர்க்கிறது
என் புரியாத
எண்ணங்களுக்கும்...
வற்றாமல் செய்கின்ற
அமுதமாய் தமிழ்
என்னுள் நீடிக்கிறது
இந்த அற்புதம் பெற
எத்தனை நாட்களின்
ஏக்கம் உறைந்த
கண்ணீர் துளிகளில்
இன்று பூக்கிறது
தமிழ் மனம் ....


தோழர்களின் தோழமை
எதிர்பார்த்து அமைவதில்லை
தொன்று தொட்டு வருகிற
நட்பு என்னும் பாசம்
புரிதலில் முழுமை அடைகிறது ...
புரியாமல் போன உறவுகள் கூட
பிரிவு என்னும் நினைவுகளில் வாழும் .


முன் நாளில் முளைத்த
முழு புன்னைகையில்
ஒளிர் விட்ட என் தேச பிதாவே
இன் நாட்களிலும் மாறா
புன்னகை பூக்கும் உன் தரிசனம்
மீண்டும் கிடைக்க என்ன தவம்
செய்தேன் ...
நம் தேசத்தின் தேர்தலின்
கொண்டாட்டங்களில் நானும்
உன் புன்னகை ரசித்தேன் ...
என் புன்னகையின் சாயல் வேறு
நின் புன்னகையின் புனிதம் வேறு
எதுவாயினும் உன்னால் சிரிக்கும்
நம் தேசம் வாழியவே ....
உன் மாறா புன்னகையும் வாழியவே .....


நிஜம் தொலைத்து பொய்யை
நேசிக்கும் நான் ...
பொய்யின் விளிம்பில்
உறங்கி கொண்டு இருக்கிறேன்
ஒரு நாளில் தவறி விழுந்து
விட்டேன் ...
உண்மையின் நிழலில் நிற்க
கூட முடியாமல் ஒதுங்கினேன்
பொய்யை தேடி ....
பொய்யும் போயின்
போகமல் நிற்கிறது
உண்மையின் மிச்ச
நிழலில் என் புன்னகை
கூச செய்கிறது ..


என் நிஜத்தை உந்தன்
பொய் மனதை
துரத்துகிறது...
விலகி செல்கிறது
நின் பார்வையும்
பார்க்கும் விதமும் ..
தொலை தூரத்தில்
சந்தித்து கொள்ளட்டும்
நம் நிழல்கள் ...
உண்மை ஒளியில்
நம் நிழல்கள் கூட
பிரகாசிக்கும்
நம் பிரிவை போல் .



மாறா நிலையில் இருக்க
முயல...
மாறாமல் நிலைத்து விட்டன
என் கண்ணீர் ...
காய்ந்த இடங்களில் உன்
வலியின் தடம்...
முகம் கழுவியும் வழிகிறது
உன் பிரிவு நிலை...
சுற்றும் முற்றும் பார்தேன்
தனிமையின் நிழலின்
தவிப்பில் நான் மட்டும்
இருக்க என் நினைவுகள்
என்னை விட்டு எங்கோ
செல்கிறது ....



பிச்சையிட்டாய் என்
எழ்மை நிலையின்
அறிவு பசிக்கு .
நிறைவான பின்
மறந்தே போனேன்
நன்றி மறவாமல் ....
மீண்டும் உன்னை பார்க்க
செல்லும் பொழுது
என் மனம் போல்
நீயும் தூசி படிந்து
காண்கிறாய்...
உன்னை படிக்க
இன்னும் யாரும்
வர வில்லை என்று ஏக்கம்
கொல்லாதே ..
இனி நம் ஆக்கமே ....




மாறிபோனால்
மாற்றி விடலாம்
என்றே நினைத்தேன் .
மறந்தே அல்லவா
போனால் ...
நாம் நடந்து சென்ற
பாதையின் அளவு
கூட குறைந்து
விட்டதாம்
இன்று ..
மறுபடியும்
அந்த பாதையின்
வழியே நீ பயணிக்கும்
பொழுது நான் விட்டு
சென்ற சுவாசம்
உன்னை வந்து சேரும் ..
அப்பொழுது மாறி
விடாதே உன் நிலையிலே
இரு .
என் என்றால் நானும்
மாறி போனாலும்
போவேன் ..




மாற்றாமல்
என்றேனும்
மாற்றம் வந்தது உண்டோ ?
நானும் மாறினேன்
உனக்காக
எல்லாமுமாக ...
காதலின் தோற்றம்
மாறியது ..
மீறாமல் செய்த
சொல்லால்...
வாழ்க்கையும்
வாழும் காலமும்
மாறி போனது
என் மாற்றங்களினால் .




முறையான
விருப்பங்களுக்கு
தான்
என் விருப்பம்...
நீயோ
விரும்பாத
நிலையிலும்..
என்னை
குற்றம் சுமத்த
முடிகிற உன்னால்
எப்படி என்
அன்பைப் பெறமுடியும் ?




சேகரித்துக்
கொள்கிறாள்
நான்
இது வரை
சொல்லாத வார்தைகளை ...
நான் வெளி காட்டி கொள்ள
முடியாத சுயத்தை ...
அவளுடன் நான் இல்லாத
நொடிகளை ...
அவள் என்னிடம் இருந்து
எதிர் பராதவற்றை எல்லாமுமே
சேகரித்துக்
கொள்கிறாள் ...
என்னுடன் முழுமையாக
வாழ...



என்று ஆட்கொண்டேன்
உன் சுகமான
நினைவுகளை ...
நினைத்து பார்கையில்
பல நிலைகளில்
உன் பாதிப்புகளின்
மிச்சம் எராளமாக
நிறைந்துள்ளது ...
நான் அதை அகற்ற
முற்படும் பொழுது
எல்லாம்.
இன்னும் அதிகமான
விளைவுகளை என்
நினைவலைகளில்
ஏற்பட வைக்கிறாய் .
நான் மிக்க நெருங்கி
உன் நினைவுகளை
நேரெதிர் பார்க்கும்
பொழுது அங்கே
கண்டது என்
ஆசைகளின்
பிரதிபலிப்பு மட்டுமே...
நான் விருப்பம்
கொண்டது எல்லாம்
உன் செயல்களின்
நினைவாக என்னை சேர்கிறது .






வேண்டும் என்று நான் கேட்ட
பொழுது எல்லாம்
வேண்டாம் என்றாய் ...
இன்றோ வேண்டாம் என்று
சொல்லும் பொழுது
வேண்டும் என்கிறாயே
உன் முரணப்பாடுகள்
முறிந்து கொள்கிறது
உன் எண்ணத்தில்.
இருந்தும் நான்
சரி என்னும் பொழுது ...
மீண்டும் சொல்கிறாய்
வேண்டாம் என்று ...





உவமையாக்குவேன் உன்
மவுனங்களை இருந்தும் ..
எதனுடன் என்று சற்று
குழம்பி தான் போனேன்
உவமையே உன்னை கண்டு
அஞ்சினாலும் அஞ்சும் ...
எல்லாமுமாய் நீயா இருக்கும்
பொழுது ஒப்பிட்டு என்ன பயன் ?






உச்சத்தை பார்க்கும்
வறுமை ...
கிளசல்களில் கவன
சிதறலில் ...
நிலை கொள்ள வைக்கும்
வார்த்தை..
விடாமல் துரத்தும் கொடிய
நோய் ...
கவலையும் வருத்தமும்
கண்ணிரில் கரைய ...
விடை பெறாமல் விலகி
செல்கிறது ....
என் மன சாட்சி
தொலைந்து போக
சொல்லி விட்டேன்
நகர வாழ்கையில் ....





கடமை உணர்வுக்காக
சிறுமை கொண்டது
போதும்..
உன் வாழ்க்கை நீ
வழயில் வாழ்ந்திடு
காலம் புதிய
சுவடுகள் பதிக்கும்
உன்னை பார்த்து..
அதன் வழியில்
பல பேர் பயணிக்கலாம்
தூற்றலாம் எதுவாயினும்
உன் சிந்தனை
உனக்கு மட்டுமே உயர்வானது .




இந்த
நிஜத்தோடு
என் உள்ளமும்
சுட்டு பொசுங்கும்..
சாம்பலின் மீது
நின்றும் என் ஆணவம்
ஆர்பரிக்கிறது ...
நான் சாம்பலில்
எனக்கான அரியாசனத்தில்
உடகார்ந்து கொண்டு
ரசிக்கிறேன் என்
பொய்யான உள்ளத்தை ...





நட்பின் ஆழத்தை உணர்த்த
நீ ஒன்றும் குழி பறிக்கவில்லை
மாறாக வானளவு உயர்ந்தாய்
நம் நட்பில் ....
இன்னும் இன்னும் வளர்கிறாய்
சுயம்புவாக ..
என் அகம்பாவமும் ஆணவமும் கூட
நல்லதாக தெரிகிறது உன் நட்பை
நான் கொண்டதில் இருந்து ....






விதித்தது யாராக
இருக்கட்டுமே ...
அவை நம்மிடம்
விடை பெற்று செல்லட்டும்.
முதல் தோன்றிய உயிரின்
நிறைவேறாத எச்சங்கள்
தான் இன்று எண்ணங்களின்
தீமையாக வடிவெடுக்கிறது.
எது எப்படி இருப்பினும்
நல் விதையாக விதைத்தால்
முளைப்பதும் நல் விதியே .




நான் உன்
சுவாசமாக
இருக்க வேண்டும்
என்று சொல்லும்
பொழுது கூட
நான் உணரவில்லை
நம் பிரிவை ....
சுவாசிக்கும் பொழுது
எழும் சில மைக்ரான் நொடி
பிரிவு கூட
என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை
சுவாசமாக அல்ல ....
நீ நீயாகவே கலந்திடு என்னுள் ....




முதலும் முடிவுமாய்
ஆனாய்
சிவமாக அல்ல
சக்தியாக ... ..
காத்திருக்கும் நொடிகளில்
காணமல் போகும்
என்
எதிர்பார்புகள்
மீண்டும் மீண்டும்
பிறக்கிறது. என்ன
மாயம் செய்தாயோ
மயங்கி கிடக்கிறேன்
உன்னை காண வேண்டி .



உன் மறு வருகைக்காக
மாறாமல் நான் ..
ஊடலின் பொழுது
ஏற்படும் நொடி நிசப்தம்
போல்...
ஒரு அமைதி நிலை
உன் வருகைக்காக ...
காத்திருக்கிறது .





என் காதலும் நீயே
என் பிரபஞ்சமும் நீயே ..
காதல் அன்பில்
நனையவே விருப்பம்
நீயோ குடை பிடிக்கிறாய்
கேட்டால் ..
நீ மட்டும் என்னை சீண்டும்
பாக்கியம் பெறுகிறாய்
நானும் பெற வேண்டி..
கொடையாக நான்
செய்யும் காதல் இது .





சுற்றிக்கொண்டிருக்கும்
உன் மறுப்புகள்
மாய்த்து கொள்ள துடிக்கிறது ..
உன் விருபங்களாக
மோட்சம் அடைய..



என்னோடு
தொலைந்து போ ..
தொலைக்காமல் இருப்பேன்
என்றும் ..
தொலை தூரத்தில் இருந்தும்
தொல்லை செய்கிறாய்
நினைவுகளில் ..
மகிழ்ச்சி வலியில் கனவும்
களவு போகிறது
உன்னை மீட்டு எடுக்க .

No comments:

Post a Comment